தமிழ்நாடு

திருவள்ளூர் ஏரியில் வெள்ளப்பெருக்கு: பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தால் பாலம் மூழ்கியதால் சாலையின் இருபுறமும் 3 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 2 நாள்களாக விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் உள்ள மரங்கள் வேரோடு சாயந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதற்கிடையே திருவள்ளூர் அருகே போளிவாக்கம் ஏரியில் தொடர்ந்து மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் மூழ்கியது. இதனால், சாலை வழி தெரியாமல் திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை பணியாளர்கள் பேருந்துகள், பயணிகள் பேருந்துகள் மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் 5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்றததால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. தற்போதைய நிலையில் இச்சாலை விரிவாக்கம் பணிகளும் நடந்து வருவதால் சாலையோரம் சேறும் சகதியுமாகவும் இருந்ததால் வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதுகுறித்து சம்பவம் அறிந்த மணவாளநகர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து வாகனப் போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த ஏரியில் பாலம் வழியாக நீரோட்டம் குறைந்து இருபுறமும் எல்லைக் கற்கள் தெரிந்தபின் ஒவ்வொரு வாகனங்களாக செல்வதற்கு ஏற்பாடு செய்தனர். அதிலும் சிறு வாகனங்களில் புகைக்குழாய்களில் தண்ணீர் புகுந்து நின்றதால் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த வெள்ளப்பெருக்கால் பாலம் மூழ்கியதால் தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களும், பேருந்து பயணிகளும் குறிபிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினர். 

மின்தடை: இந்த கனமழையால் திருவள்ளூர் பகுதியில் சி.என்.சாலை, ஜெயின்நகர், ஜெயாநகர் மற்றும் காக்களூர்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்களின் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தடை என்பது சனிக்கிழமை காலை 10 மணி வரையில் நீடித்தது.

மழை அளவு: இந்த மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு - ஆவடி - 170, திருத்தணி - 162, கும்மிடிப்பூண்டி - 134, சோழவரம் - 129, பள்ளிப்பட்டு - 127, ஊத்துக்கோட்டை - 124.50, செங்குன்றம் - 121, ஜமீன்கொரட்டூர் - 116.80, திருவள்ளூர் - 114, பொன்னேரி - 112, பூந்தமல்லி - 110.50, பூண்டி - 105, தாமரைபாக்கம் - 96, திருவாலங்காடு - 88, ஆர்.கே.பேட்டை - 66 என மொத்தம் 1775.80 மி.மீ, சராசரியாக 118.29 மி.மீ. மழை பெய்துள்ளது.                      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT