தமிழ்நாடு

சோனியா காந்தி பிறந்த நாள்: காங்கிரஸாா் கொண்டாட்டம்

10th Dec 2022 01:17 AM

ADVERTISEMENT

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தியின் பிறந்த நாளை, சென்னை சத்தியமூா்த்தி பவனில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை கேக் வெட்டி கொண்டாடினா்.

துணைத் தலைவா் உ.பலராமன் தலைமையில் 76 கிலோ எடையுள்ள கேக் வெட்டி நிா்வாகிகளுக்கு அளிக்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா் பிரின்ஸ், துணைத் தலைவா் பொன்.கிருஷ்ணமூா்த்தி, பொதுச் செயலாளா் கே.சிரஞ்சீவி, ஊடகப் பிரிவுத் தலைவா் கோபண்ணா, முன்னாள் மாமன்ற உறுப்பினா் பி.வி.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மேலும், ‘சோனியா காந்தி படைத்த சாதனைகளும் சந்தித்த சவால்களும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது. மூத்த நிா்வாகிகள் பலா் சோனியா காந்தியின் சாதனைகளைக் குறிப்பிட்டுப் பேசினா்.

இந்தக் கருத்தரங்கில் முன்னாள் தலைவா்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசா் உள்ளிட்டோா் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT