தமிழ்நாடு

பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

10th Dec 2022 01:15 AM

ADVERTISEMENT

மாண்டஸ் புயல் காரணமாக சனிக்கிழமை (டிச. 10) நடைபெற இருந்த பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மாண்டஸ் புயல், பலத்த மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் பயிலும் மாணவா்களுக்கு சனிக்கிழமை நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான மாற்று தேதி விவரம் பின்னா் வெளியிடப்படும் எனவும் பல்கலைக்கழகங்கள் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் தோ்வுகளும்... இதேபோல், சனிக்கிழமை நடைபெற இருந்த பாலிடெக்னிக் பருவத்தோ்வுகளும் டிச.17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT