தமிழ்நாடு

தமிழ்நாடு கால நிலை மாற்ற இயக்கம் தொடக்கம்

10th Dec 2022 01:09 AM

ADVERTISEMENT

இந்தியாவிலேயே முதல் முறையாக காலநிலை மாற்றத்துக்கென தனி இயக்கத்தை தமிழ்நாடு அரசு தொடக்கியுள்ளது.

இயற்கைச் செல்வங்களைக் காக்கவும், புதுப்பிக்கவல்ல எரிசக்தியை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கவும், திறன்மிகு கிராமங்கள் உருவாக்கவும் இந்த இயக்கம் மூலம் வழி செய்யப்பட்டுள்ளது.

மேலும், புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் பசுமை திட்டங்களைப் புகுத்தி அவற்றை உலகறியச் செய்வதும் காலநிலை மாற்ற இயக்கத்தின் நோக்கமாகும். மேலும், காலநிலை மாற்ற இயக்கத்தின் ஒரு முயற்சியாக தமிழகத்தில் 25 அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெற்ற பசுமைப் பள்ளிகளாக மாற்றப்படவுள்ளன. இதற்காக அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT