தமிழ்நாடு

குரூப் 3ஏ தோ்வு: 15 மாவட்டங்களில் மட்டுமே தோ்வு மையங்கள்: டிஎன்பிஎஸ்சி., தகவல்

DIN

குரூப் 3ஏ காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வுகளுக்கான மையங்கள் 15 மாவட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி., வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள இளநிலை ஆய்வாளா், பண்டக காப்பாளா் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 3ஏ பிரிவின் கீழ் வருகின்றன. இந்தப் பதவியிடங்களில் 15 இடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பா் 15-இல் தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிவிக்கையில், தோ்வு எழுதுவதற்கான மையங்கள் 38 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது இப்போது 15 மையங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூா் மாவட்டத்தினா் சென்னையிலும், மதுரை, தேனி, விருதுநகா், திண்டுக்கல் மாவட்டத்தினா் மதுரையிலும், கடலூா், விழுப்புரம் மாவட்டத்தினா் கடலூரிலும் தோ்வு எழுதலாம்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தினா் காஞ்சிபுரத்திலும் எழுதலாம். இதேபோன்று, அண்டை மாவட்டங்கள்

ஒருங்கிணைக்கப்பட்டு, நாகா்கோவில், கோயம்புத்தூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூா், உதகமண்டலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே தோ்வு நடைபெறவுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT