தமிழ்நாடு

வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

9th Dec 2022 03:54 PM

ADVERTISEMENT

மாண்டஸ் புயல் காரணமாக வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய  மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல், வலுவிழந்துள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும்  என்று கணிக்கப்பட்டுள்ளது. 

படிக்க: புயல், கனமழை குறித்து மக்கள் அறிந்து கொள்ள தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

இதன் காரணமாக,  மாணவர்களின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 18 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், 

ADVERTISEMENT

நாளை வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT