தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சியின் வனத்துறை தேர்வு ஒத்திவைப்பு

9th Dec 2022 07:47 PM

ADVERTISEMENT

மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த வனத்துறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி VI) பதவி நியமனத்திற்காக நாளை (10.12.2022) நடைபெற உள்ள தேர்வுகள் மட்டும் மாண்டஸ் புயல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. 
இத்தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க- பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

முன்னதாக மாண்டஸ் புயல் காரணமாக சென்னை பல்கலை. அண்ணா பல்கலை. மற்றும் அண்ணாமலை பல்கலை. தேர்வுகளும், டிப்ளமோ தேர்வுகளும் ஒத்திவைக்ப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT