தமிழ்நாடு

நவீன மின்மயானம்: ரூ.5 லட்சம் வழங்கிய காஞ்சிபுரம் உணவக உரிமையாளர்கள்

9th Dec 2022 03:46 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நவீன மின்மயானம் அமைக்க ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினர் உணவக உரிமையாளர்கள்.

காஞ்சிபுரம் நாகலூத்து மேடு பகுதி சுடுகாட்டில் நவீன மின்மயானம் அமைக்க உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் ரூ.5லட்சம் நன்கொடையினை மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலூத்து மேடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் நவீன மின் மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்

இதன்படி காஞ்சிபுரத்தில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் முருகேசன் தலைமையிலான சங்க நிர்வாகிகள் ரூ.5லட்சத்துக்கான காசோலையினை நன்கொடையாக வழங்கினார்கள்.

இதையும் படிக்க.. ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!

இத்தொகையினை அவர்கள் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜிடம் வழங்கினர். இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன், மண்டலக்குழுத் தலைவர் எஸ்.சந்துரு, பணிக்குழுவின் தலைவர் சுரேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT