தமிழ்நாடு

அவசியமின்றி வெளியே வர வேண்டாம்.. போக்குவரத்துக் காவலர்கள் எச்சரிக்கை

9th Dec 2022 01:22 PM

ADVERTISEMENT


சென்னை: அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக் காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை போக்குவரத்துக் காவலர்கள் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கைப் பதிவில், மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமானக் காரணங்களுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்று போக்குவரத்துக் காவல்துறைச் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்

அவசியமின்றி வெளியே வர வண்டாம், பாதுகாப்பாக மக்கள் பயணம் மேற்கொள்ளுமாறும் போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT

அவ்வாறு சாலையில் செல்லும் போது மழைக்காக ஒதுங்க நேரிட்டால் மரங்கள், பழுதடைந்தக் கட்டடங்கள் விளம்பர போர்டுகள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் கீழ் ஒதுங்குவதைத் தவிர்க்கவும்.

இதையும் படிக்க.. ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!

பொதுமக்களின் நலனுக்காக:
அவசியத் தேவைகளுக்கானப் பயணம் மேற்கொள்பவர்கள் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் குடை உபயோகிப்பதைத் தவிர்த்து மழை அங்கி அணியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT