தமிழ்நாடு

சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்! 3 மணி நேரத்தில் வலுவிழக்கும்

DIN


வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் படிப்படியாக சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலலும் 
காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கே 200 கி.மீ. தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.

'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், சென்னையிலிருந்து தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து தென்கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.     

இந்தப் புயல் இது இன்று இரவு காரைக்கால் - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே மாமல்லபுரம் வழியாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலாக மாறியுள்ள மாண்டஸ், அடுத்த 3 மணிநேரங்களில் புயலாக வலுவிழக்கவுள்ளது. புயல் காரணமாக வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழைபெய்து வருகிறது.

ரெட் அலர்ட்:

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT