தமிழ்நாடு

பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

9th Dec 2022 07:17 PM

ADVERTISEMENT

சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, தற்போது வலுவிழந்து புயலாக மாறியுள்ள நிலையில், இன்று(டிச. 9) நள்ளிரவு முதல் நாளை(டிச. 10) அதிகாலைக்குள் புயல் மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இதையும் படிக்க- பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக வேண்டும்: ஆர்ஜேடி முன்னாள் எம்எல்ஏ

இதனால் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். 

ADVERTISEMENT

இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வரும்நிலையில முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அப்போது அவர் கேட்டறிந்தார்.  அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் சென்னை அவசர காட்டுபாட்டு மையத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT