தமிழ்நாடு

மோசமான வானிலை: சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் சேவை ரத்து!

9th Dec 2022 09:34 AM

ADVERTISEMENT


சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 7 பயணிகள் விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமாா் 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கில் சுமாா் 460 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி, வெள்ளிக்கிழமை (டிச.9) இரவு புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கக் கூடும்.

இதன் காரணமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.9, 10) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அதி பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ADVERTISEMENT

இதையும் படிக்க | 'மாண்டஸ்' புயல்: மெரினாவில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு தீவிரம்

வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில், சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். வெள்ளி மாலை முதல் சனிக்கிழமை காலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 80 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக, மோசமான வானிலை நிலவுவதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் புறப்படும் 7 பயணிகள் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. 

கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா, மும்பை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா ஆகிய நகரங்களில் இருந்து வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும், காற்றின் வேகம், மழை அளவை பொறுத்து மேலும் சில விமானங்கள் சேலை ரத்து செய்யப்படலாம் எனவும், மாண்டஸ் புயலை சமாளிக்கும் விதத்தில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

காற்றின் வேகத்தை பொறுத்து விமான போக்குவரத்து சேவை இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT