தமிழ்நாடு

அண்ணா பல்கலை: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

9th Dec 2022 04:43 PM

ADVERTISEMENT

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பல்கலை தகவல் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து புயலாக மாறியுள்ள நிலையில், இன்றிரவு முதல் நாளை அதிகாலை மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்துவருகிறது.

ADVERTISEMENT

மாணவர்களின் பாதுகாப்புக் கருதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த  செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

படிக்க: மாண்டஸ் புயல்: நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு?

அதேபோன்று அண்ணா பல்கலைக்கழகத்தின், உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT