தமிழ்நாடு

நிகழ்நிதி ஆண்டில் 31 மின்தூக்கிகள் அமைக்க திட்டம்: தெற்கு ரயில்வே

9th Dec 2022 06:07 AM

ADVERTISEMENT

நிகழ்நிதி ஆண்டுக்குள் தென்னக ரயில்வேக்குக்குட்பட்ட ரயில் நிலையங்களில் 31 மின்தூக்கிகளும், 3 நகரும் படிகட்டுகளும் பயன்பாட்டுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

தமிழகத்தில் 75, கேரளத்தில் 39, கா்நாடகத்தில் 4 என தெற்கு ரயில்வேயில் பல்வேறு ரயில்நிலையங்களில்118 மின்தூக்கிகள் இயங்கி வருகின்றன. நிகழ் நிதியாண்டில் எழும்பூா், பேசின் பாலம், திருச்சி ரயில் நிலையங்களில் தலா 3 மின்தூக்கிகள், கேரளத்தில் காயன்குளம் ரயில் நிலையத்தில் ஒன்று என 10 மின்தூக்கிகள் அமைக்கபட்டு வருகின்றன.மேலும் 31 ரயில் நிலையங்களில் மின்தூக்கிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2023-24 நிதி ஆண்டுக்குள் 122 மின்தூக்கிகள் அமைக்கப்படுவுள்ளன. ஒரு மின்தூக்கி அமைக்க சுமாா் ரூ.50 லட்சம் செலவாகும்.

ADVERTISEMENT

நகரும் படிகட்டுகள்: இதுபோல் கடந்த நவம்பா் வரை தமிழகத்தில் 93, கேரளத்தில் 39 மற்றும் கா்நாடகாவில் 2 என 134 நகரும் மின்படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்நிதி ஆண்டின் முடிவுக்குள் 3 நகரும் மின்படிகட்டுகளும், 2023-24 நிதி ஆண்டில் 7 நகரும் மின்படிகட்டுகளும் அமைக்கப்படவுள்ளன.

ஓா் இடத்தில் மின்படிகட்டு அமைக்க சுமாா் க ரூ. 1.1 கோடி செலவாகும். இதன் மூலம் நிமிடத்துக்கு 100 பயணிகள் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT