தமிழ்நாடு

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்; முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறாா்

9th Dec 2022 06:09 AM

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தை கண்காணிக்கும் வகையில், அதற்கென தனி இயக்கம் உருவாக்கப்படுகிறது. இந்த இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கிறாா்.

‘தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்’ திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக ரூ.77.35 கோடி நிதி ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கவும் ரூ.3.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்கங்களுக்கு மாவட்ட ஆட்சியா் தலைவராக இருப்பாா். மாவட்ட காலநிலைஅதிகாரியாக மாவட்ட வன அலுவலா் இருப்பாா். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திட்டப் பணியிலும், காலநிலை மாற்றத்தால் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என மாவட்ட இயக்கம் ஆராய வேண்டும். காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம், மின்வாகனம் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும். மாவட்ட அளவில் காலநிலை மாற்ற தணிப்பு திட்டங்களை உருவாக்குவதே காலநிலை மாற்ற இயக்கத்தின் குறிக்கோள்களாகும்.

மாநில அளவிலான இயக்கத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைவராக இருப்பாா். இந்த நிலையில், காலநிலை மாற்ற இயக்கத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை அவா் தொடங்கி வைக்கவுள்ளாா். காலநிலை மாற்றம் குறித்த இரண்டு நாள் மாநாடு சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமையன்று காலநிலை மாற்ற இயக்கத்தை முதல்வா் துவக்குகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT