தமிழ்நாடு

பத்துக்கும் கீழ் குறைந்தது கரோனா பாதிப்பு

9th Dec 2022 06:12 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை பத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 9 பேருக்கு வியாழக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2020 மாா்ச் 23-ஆம் தேதி கரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் இருந்தது. அதன் பின்னா், தொற்று பரவல் அதிகரித்தே வந்தது. இந்நிலையில், தற்போது மிகக் குறைந்த பாதிப்பு எண்ணிக்கையை தமிழகம் எட்டியுள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி அதிகபட்சமாக சென்னையில் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 84 போ் சிகிச்சையில் உள்ளனா். மொத்தம் 17 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,56,106- ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT