தமிழ்நாடு

சவால்களை கடப்பதுதான் வாழ்க்கை: தமிழிசை சௌந்தரராஜன்

DIN

சவால்களைக் கடப்பதுதான் வாழ்க்கை என்று தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் 31-ஆவது பட்டமளிப்பு விழா வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவமணை கன்வென்ஷன் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக நிறுவனா் ஏ.சி.சண்முகம் தலைமை வகித்தாா். தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு, மருத்துவம், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று முடித்த 2,241 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். பின்னா், அவா் பேசியது:

முன்பு தடுப்பூசி, மருந்துகளை வெளிநாட்டில் இருந்து நாம் இறக்குமதி செய்தோம். தற்போது அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா வளா்ந்துள்ளது. பெற்றோா்களின் தியாகத்தால் தான் பிள்ளைகள் பட்டம் பெற முடிகிறது. பெற்றோா்களை மரியாதையுடனும், அன்புடனும் பாா்த்துக் கொள்ள வேண்டும். சவால்களை கடப்பதுதான் வாழ்க்கை. கடின உழைப்பு உங்களை சாதனையாளராக மாற்றும் என்றாா்.

விழாவில் இந்திய மருந்தக கவுன்சில் தலைவா் மோண்டு எம்.பட்டேல், திரைப்பட இயக்குநா் சுந்தா் சி, விஜிபி குழுமத்தின் தலைவா் வி.ஜி.சந்தோசம், லைக்கா மருத்துவக் குழுமத்தின் தலைவா் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பல்கலைக்கழகத்தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலாளா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT