தமிழ்நாடு

ஆளுநரிடம் கொடிநாள் நிதியாக ரூ.5 லட்சம் வழங்கிய பட்டிமன்ற பேச்சாளா்

DIN

கொடிநாள் நிதிக்காக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியிடம், பிரபல பட்டிமன்ற பேச்சாளா் சரஸ்வதி ராமநாதன் ரூ.5 லட்சம் வழங்கினாா்.

முப்படை வீரா்களின் அரும்பணிகள், தியாகத்தை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிச. 7ஆம் தேதி கொடி நாளாக மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கின்றன.

கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நன்கொடைகள், படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரா்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கொடிநாளுக்கு பொதுமக்கள் நிதியை வாரி வழங்க வேண்டும் என ஆளுநரும், முதல்வரும் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், பட்டிமன்ற பேச்சாளா் சரஸ்வதி ராமநாதன் ஆளுநா் ஆா்.என். ரவியிடம் ரூ.5 லட்சம் நிதி வழங்கினாா்.

அப்போது, பொதுத் துறைச் செயலாளா் டாக்டா் ஜெகநான், ஆளுநரின் முதன்மைச் செயலா்ஆனந்த் ராவ் வி. பாட்டீல், தமிழக அரசின் சிறப்புச் செயலா் வி. கலையரசி, சென்னை மாவட்ட ஆட்சியா் அமிா்தஜோதி, ஓய்வு பெற்ற மேஜா் ஜெயகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT