தமிழ்நாடு

சேலம், சிவகங்கை, திருச்சி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

8th Dec 2022 09:54 PM

ADVERTISEMENT


'மாண்டஸ்' புயல் காரணமாக திருவள்ளூர், சேலம், திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை (டிச.9) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்றிரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது.

'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், இன்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, காரைக்காலிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது. 

ADVERTISEMENT

இதனால், பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் திருவள்ளூர், சேலம், திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

 இயற்கை பேரிடர் இடையூறுகளை எதிர்கொள்ளவும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும், விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT