தமிழ்நாடு

புயல் எதிரொலி: திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

8th Dec 2022 02:43 PM

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் நாளை இரவு புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டாவில் கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

படிக்க: சென்னைக்கு 550 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல்!

ADVERTISEMENT

புயல், கனமழை காரணமாக முன்னதாக வேலூர் மாவட்டத்திற்கு இன்று பிற்பகல் மற்றும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT