தமிழ்நாடு

மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் மாண்டஸ்: இந்திய வானிலை மையம்

DIN

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயல் நாளை இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா - புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்தியில், தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் இன்று மாலை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாண்டஸ் புயல் தீவிரப் புயலாகவே நாளை காரை வரை நீடிக்கும்,  பிறகு மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலு குறைந்து நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்பதால், தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருப்பதாவது, வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே டிசம்பர் 9ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கும். 

மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 65 - 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடப்பதால்  வட தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யும். டிசம்பர் 10ஆம் தேதியும் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல்
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம், நேற்று இரவு புயலாக (மாண்டஸ்) வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது.

இன்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, காரைக்காலிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திர கடற்கரையில் மாமல்லபுரம் அருகே டிசம்பர் 9ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும்.

மேலும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்,  வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT