தமிழ்நாடு

3ஆம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 

8th Dec 2022 07:45 PM

ADVERTISEMENT

தனது பள்ளிக்கு கட்டடம் கோரி கடிதம் எழுதிய கோரிக்கை ஏற்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதிகை ரயில் மூலம் இன்று தென்காசி மாவட்டத்திற்கு சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் மூன்றாம் வகுப்பு மாணவியால் தனக்கு எழுதப்பட்ட கோரிக்கை கடிதம் குறித்து பேசினார். 

இதையும் படிக்க | திருவாரூர், பெரம்பலூர், தஞ்சையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ADVERTISEMENT

அப்போது அவர் தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி வினைதீர்த்த நாடார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் ஆராதனா எனும் மாணவி கடந்து சில தினங்களுக்கு முன்பாக தனக்கு கோரிக்கை கடிதம் எழுதியிருந்ததை பகிர்ந்து கொண்டார். 

“ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்றும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது இலக்கு. 3ஆம் வகுப்பு படிக்கும் ஆராதனா எனும் குழந்தை தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை வேண்டும் என எனக்கு எழுதிய கடிதத்தில் கேட்டிருந்தார். எத்தகைய நம்பிக்கையை அவர் என்மீது வைத்திருந்தால் அவர் இந்த கடிதத்தை எழுதியிருப்பார். குழந்தை ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்படுவதாக நான் இன்று அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT