தமிழ்நாடு

இயற்கை நமக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று பார்க்கலாம்!

8th Dec 2022 02:44 PM

ADVERTISEMENT

தென்கிழக்கு வங்கக் கடலில் புதன்கிழமை இரவு புயல் சின்னம் உருவாகியிருக்கும் நிலையில், அதற்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வட மேற்காக நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று இரவு 11.30 மணியளவில் புயலாக (மாண்டஸ்) வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இதையும் படிக்க.. வேறொருவருக்கு பணத்தை மாற்றி அனுப்பிவீட்டீர்களா? பயம் வேண்டாம்!

இது நாளை இரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வியாழக்கிழமை காலை நிலவரப்படி, காரைக்காலுக்கு 460 கிலோ மீட்டர் கிழக்கு - தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு 550 கி.மீ. தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. 

மாண்டஸ் புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, மாண்டுவின் எதிரிகள் என்றால், வறண்ட காற்று மற்றும் காற்றின்வேகம் ஆகியவைதான். இவை புயலின் தாக்கத்தை குறைக்கின்றன. இந்த புயல் சின்னத்தின் மேகக் கூட்டங்கள் வடக்கில் அதிகம் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கிலிருந்து ஈரப்பதம் கிடைத்து வருகிறது. ஒருவழியாக அதிக மழைப்பொழிவு இருக்கும் புயல் சின்னமாக இருக்கலாம்.

இதையும் படிக்க.. தென்காசிக்கு ஸ்டாலின் பயணித்த 'சலூன் கோச்': மக்கள் பயணிக்க முடியுமா?

வட தமிழகத்துக்கு நாளை மிகச் சிறந்த நாளாக இருக்கலாம். குறைந்த எதிர்பார்ப்புகளுடன், நாளை நமக்கு இயற்கை என்ன திட்டம் வைத்திருக்கிறதோ அதனைக் கொண்டு மகிழ்வோம்.

மண்டு (மாண்டஸ்) மண்டுவாகவே இருக்குமா அல்லது ஜண்டுவாக மாறுமா என்று பொருத்திருந்து பார்க்கலாம். மழை மேகங்கள் ரேடாரின் பார்வைக்குள் வந்தால்தான் மற்ற விஷயங்கள் தெரியவரும். இன்னும் அது சற்றுத் தொலைவில்தான் இருக்கிறது.

இதையும் படிக்க.. கரையை கடக்கும் மாண்டஸ்: எத்தனை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

இன்று இரவு தான் மழை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. நாளை மிகச் சிறந்த நாளாக இருக்கலாம். புயல் சின்னம் கரையைக் கடக்கும் போது, மிகப்பெரிய மேகக் கூட்டங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. புயல் சின்னத்தின் மையப் பகுதியான மேகக் கூட்டங்கள் நம்மைக் கடக்கலாம் என்று தோன்றுகிறது. கடலூருக்குக் கீழே புயல் சின்னம் கரையைக் கடக்க வாய்ப்புகள் குறைவு என்று பதிவிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT