தமிழ்நாடு

மாண்டஸ் புயல்: 6 மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயங்காது!

8th Dec 2022 06:14 PM

ADVERTISEMENT

 

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் சேவை இயங்காது என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்றிரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

படிக்க கரையை கடக்கும் மாண்டஸ்: 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 550 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

மாண்டஸ் புயல் நாளை (டிச.9) இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

படிக்கமாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் மாண்டஸ்: இந்திய வானிலை மையம்

இந்நிலையில், புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படாது என போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.

பேருந்து நிறுத்தங்களில் அதிக கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT