தமிழ்நாடு

உதவி எண் அறிவிப்பு; கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்!

8th Dec 2022 03:44 PM

ADVERTISEMENT

வங்கக் கடலில் உருவான புயல் நாளை கரையைக் கடக்கவுள்ளதால் சென்னையில் கடற்கரைகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை மெரீனா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின் வெட்டு, மின் கசிவு, போன்ற புகார்களுக்கு 1913 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 169 நிவாரண முகாம்கள் தயாராக இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. டிசம்பர் 9-ம் தேதி காலை வரை தீவிர புயலாக இருக்கும் என்றும் அதன்பின் படிப்படியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | டிச. 12ல் குஜராத்தில் பாஜக அரசு பதவியேற்பு! 

ADVERTISEMENT
ADVERTISEMENT