தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

8th Dec 2022 11:01 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

மாண்டஸ் புயலின் நகரும் வேகம் தொடர்ந்து குறைந்து வருவதால், கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் வலுப்பெற்றது. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த தாழ்வு மண்டலம் நேற்று மாலையே புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், நகரும் வேகம் குறைந்ததால் புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

படிக்க: சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.40,184-க்கு விற்பனை!

இந்நிலையில், தற்போது புயலின் நகரும் வேகமானது மணிக்கு 6 கி.மீட்டராக குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது காரைக்காலுக்கு 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 620 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 18  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT