தமிழ்நாடு

சென்னைக்கு 550 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல்!

8th Dec 2022 01:29 PM

ADVERTISEMENT

 

சென்னையில் இருந்து 550 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வுமையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், 

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது நேற்றிரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 550 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

படிக்க: கோட்டா நகரில் 92வது நாள் ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கிய ராகுல்! 

டிசம்பர் 9-ம் தேதி நள்ளிரவு மாண்டஸ் புயல் புதுச்சேரி-ஸ்ரீரிகோட்டா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.  இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொருத்தவரை, ஒருசில இடங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிகக் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிச.10-ம் தேதி கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT