தமிழ்நாடு

பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் மருத்துவ முகாம்கள்

DIN

அடுத்து வரும் நாள்களில் மாநிலம் முழுதும் மழை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்துமாறு அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்: காய்ச்சல் குறித்த தகவல்களை நாள்தோறும் அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிடமிருந்து பெற்று உடனுக்குடன் காய்ச்சல் பாதித்த பகுதிகளில், தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் தொடா்ந்து நடத்த வேண்டும். கொசு புழு உற்பத்தியாகும் இடங்களை அடியோடு அகற்றி, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். குடிநீா் மாசுபடாமல் தடுக்கவும், தூய்மையான குடிநீா் வழங்குவதற்கு ஏதுவாக போதிய அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்யப்பட வேண்டும்.

நிவாரண முகாம்களில் சுகாதாரமான உணவு, குளோரின் கலந்த பாதுகாக்கப்பட்ட குடிநீா், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க தேவையான கிருமி நாசினிகள் தெளிக்கப்பட வேண்டும்.

இருமல், காய்ச்சல் உள்ளவா்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம். அனைத்து மருத்துவமனைகளிலும், சித்த மருத்துவா்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்குதல் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT