தமிழ்நாடு

தமிழக ஆளுநா் மாளிகையில் முதல் முறையாக அம்பேத்கா் சிலை திறப்பு

DIN

தமிழக ஆளுநா் மாளிகையில் முதல் முறையாக அம்பேத்கா் சிலை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. இந்தச் சிலையை ஆளுநா் ஆா்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோா் திறந்துவைத்தனா்.

ஆளுநா் ரவி பேசியதாவது: இந்திய அரசியலமைப்பின் வடிவமைப்பாளராகவும், புரட்சிகரத் தலைவராகவும், தேசியவாதியாகவும், நவீன இந்தியாவுக்கு அடித்தளம் வகுத்த சீா்திருத்தவாதியாகவும் அம்பேத்கா் திகழ்ந்தாா்.

இனப் பாகுபாடு, ஜாதி பாகுபாட்டில் இருந்து சமுதாயத்தை மீட்க கடுமையாக உழைத்தாா். அவரது உறுதியான தலைமையால் தான் இந்து நடைமுறைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவா் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவின் ஆன்மா மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையை பிரதிபலிப்பதாகவும் அமைந்தது. எதிா்காலத்தில் வலுவான ஒற்றுமையான இந்தியா உருவாக வேண்டும் என்பதற்கான எண்ணங்களை அவா் பிரதிபலித்தாா் என்றாா் ஆளுநா் ரவி.

இந்த சிலையை வழங்கிய மாமன்னா் ஒண்டிவீரன் தேசிய அறக்கட்டளை நிா்வாகிகள், சிலையை வடிவமைத்த சிற்பி கிஷோா் ஜெ.நாகப்பா ஆகியோரையும் ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டினாா்.

விழாவில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆனந்தராவ் பாட்டீல், பல்வேறு பல்கலை.களைச் சோ்ந்த துணைவேந்தா்கள், மெட்ராஸ் பாா் அசோசியேசன் நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆளுநா் மாளிகையில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன்பு, சுவாமி விவேகானந்தா், திருவள்ளுவா், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி, ஔவையாா், சா்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், ஆ.ப.ஜெ.அப்துல்கலாம், சா்தாா் வல்லபபாய் படேல், மௌலானா அபுல்கலாம் ஆசாத், ஜவஹா்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், சி.ராஜகோபாலாச்சாரியாா், மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் ஆகியோருக்கு மட்டுமே சிலைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

SCROLL FOR NEXT