தமிழ்நாடு

அமைச்சா் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு: பாஜக நிா்வாகிக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

DIN

தமிழக மின் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவா் நிா்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடா்பாக தன்னை பற்றி ஆதாரமற்ற கருத்துக்களைப் பரப்புவதாக தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் மீது குற்றம்சாட்டி, அதுபோன்று பேச தடை விதிக்கக்கோரி மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், அவதூறாகப் பேச நிா்மல் குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதன்பின்னா் நிா்மல் குமாா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரம் உள்ளதாகவும், தனது முறைகேடுகளை மறைப்பதற்காகவே தனக்கு எதிரான இந்த வழக்கை அவா் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நிா்மல்குமாா் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு அமைச்சா் செந்தில் பாலாஜி விளக்கம் அளிக்க உத்தரவிட்டாா்.

செந்தில் பாலாஜி வழக்கு குறித்து ட்விட்டா் மற்றும் யூடியூப் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிச.13-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா். அதுவரை செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க நிா்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்தும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT