தமிழ்நாடு

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கோர விபத்து: 6 பேர் பலி!

7th Dec 2022 07:53 AM

ADVERTISEMENT

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அருகே ஜானகிராம் பகுதியில் மினி வேன்(டாடா ஏஸ்) மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15-க்கும் மேற்பட்டவர்களுடன் மினி வேன் ஜானகிபுரம் என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது மோதியது.

முன்னால் சென்ற லாரி மீது மினி வேன் மோதிய நிலையில், பின்னால் வந்த கனகர வாகனம் மினி வேன் மீது பயங்கரமாக மோதியது.

இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கிய மினி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில், பயணம் செய்த 6 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

மேலும், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடனடியாக இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 6 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

அதிகாலை நடந்த விபத்தால் அப்பகுதி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம்

அதிகாலையில் நடைபெற்ற இந்த  விபத்தில் உயிரிழந்த ஆறு பேரும், சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

சந்திரசேகர் 70
தாமோதரன் 28
சசிகுமார் 35
சேகர் 55
ஏழுமலை 65
கோகுல் 33

படுகாயம் அடைந்தோர் விவரம்

ராமமூர்த்தி வயது 35
சதீஷ்குமார் வயது 27
 ரவி வயது 26
 சேகர் வயது 37
அய்யனார் வயது 34

இவர்கள் அனைவரும் சென்னை பல்லாவரம் பொழிச்சலூர் ஞானாம்பிகை தெரு பகுதி சேர்ந்தவர்கள்.

இந்த விபத்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  சென்ற அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT