தமிழ்நாடு

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி சிகிச்சை பார்க்கும் அவல நிலை: வைரலாகும் விடியோ!

7th Dec 2022 10:03 AM

ADVERTISEMENT

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாததால் செக்யூரிட்டி சிகிச்சை பார்க்கும் அவல நிலை குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நேதாஜி சாலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக  சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இதையும் படிக்க | உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்குமா ‘நிதகம்’..?

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மோதகப்பள்ளி பகுதியை சேர்ந்த ஊராட்சியில் துய்மைப் பணியாளராக பணிபுரியும் சாரங்கபாணி என்பவர் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக வந்துள்ளார்.

ADVERTISEMENT

அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் மருத்துவமனையில் காவலராக வேலை செய்யக்கூடிய நபர் ஒருவர் சிகிச்சை அளிப்பதும் அதே நேரத்தில் அவருக்கு குளுக்கோஸ் போடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிக்க | ரூ.2,05,700 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இது குறித்து சாரங்கபாணியின் மனைவி அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் உடல்நிலை குறைவால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து இரண்டு நாள்கள் ஆகியும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் யாரும் வந்து சிகிச்சை அளிக்கவில்லை எனவும் உடல்நல பாதிப்பு அதிகமாக உள்ளது என செவிலியர் இடம் தெரிவித்தால் மாத்திரை அளிக்கிறேன் அதை போடுங்கள் என அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், மருத்துவமனையில் காவலராக பணிபுரியும் நபர் ஒருவர் ஸ்ட்ரெச்சரில் கொண்டு வந்து சேர்த்து விட்டு அவருக்கு குளுக்கோஸ் செலுத்தி விட்டு தங்களிடம் பணம் கேட்கிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் 

சம்பவம் குறித்த விடியோ காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் யாரும் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதும் சிகிச்சைக்காக வந்த துப்புரவு பணியாளரிடம் ஸ்டெச்சரில் அழைத்துச் சென்று குளுக்கோஸ் போட மருத்துவமனை காவலர் பணம் கேட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

ADVERTISEMENT
ADVERTISEMENT