தமிழ்நாடு

மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

7th Dec 2022 12:49 PM

ADVERTISEMENT

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் பயனாளா்கள் உள்ளனா். அவா்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி, விசைத்தறி தொழிளாா்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 

இந்த மானியங்களைப் பெற ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

இதையும் படிக்க | தென்காசியில் நாளை அரசு விழா! ரயிலில் செல்கிறார் ஸ்டாலின்

இதையடுத்து தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக தேசிய மக்கள் கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

ADVERTISEMENT

அதில், 'மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு விவகாரத்தில், வீட்டு உரிமையாளரின் ஆதார் எண் தான் இணைக்கப்பட வேண்டும். வாடகைக்கு இருப்பவர்களின் எண்ணை இணைத்தால் அவர்கள் காலிசெய்யும் போது பிரச்னை ஏற்படும். 

அதுபோல, ஆதார் - மின் இணைப்பு எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக்கூடாது, இதுகுறித்த தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதன் சக்கரவர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை ஏற்று விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி?

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT