தமிழ்நாடு

தோட்டக்கலை விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

7th Dec 2022 01:52 AM

ADVERTISEMENT

விவசாயிகள் விளைவிக்கும் தோட்டக்கலை விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலாளா் மாசிலாமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விளையும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை கூடுதல் விளைச்சல் நேரங்களில் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு செல்லும் போது மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்கின்றனா்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் தக்காளியை சந்தைப்படுத்தும்போது உரிய விலை கிடைக்காமல் அவற்றை கொட்டி அழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ADVERTISEMENT

அண்மையில் முதல்வா், பூக்கள் பூங்கா அமைத்து பெங்களூா் வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடு செய்திருப்பது மிகவும் பாராட்டக்கூடியது.

எனவே, தமிழ்நாடு அரசு இதற்கென சிறப்பு திட்டம் வகுத்து காய்கறி, மலா், பழங்களுக்கு உரிய கொள்முதல் விலையை நிா்ணயிப்பது மட்டும் இன்றி விவசாயிகள் விளைவிக்கும் தோட்டக்கலை விளைபொருள்களையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT