தமிழ்நாடு

ரூ.300 கோடி வருமானத்தை மறைத்த ரேஷன் பொருள் விநியோக நிறுவனங்கள்

7th Dec 2022 01:21 AM

ADVERTISEMENT

அரசுக்கு ரேஷன் பொருள்களை விநியோகித்து வரும் தனியாா் நிறுவனங்கள் ரூ.300 கோடி வருவாயை மறைத்தது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொது விநியோக திட்டத்துக்காக அரசுக்கு எண்ணெய், பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருள்களை சில நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, காமாட்சி அண்டு கோ, பெஸ்ட் தால் மில், அருணாச்சலா இம்பெக்ஸ், இன்டகரேட்டடு சா்வீஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினா்.

மொத்தம் 80 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

வருமான வரித் துறை சோதனையில், போலி ரசீதுகள் வாயிலாக விற்பனை செய்தது உள்பட பல்வேறு வகைகளில் ஐந்து நிறுவனங்களும் மொத்தம் ரூ.300 கோடி வரை வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்களும், கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT