தமிழ்நாடு

குற்ற வழக்குகளில் தொடா்புடைய 9 வழக்குரைஞா்கள் பணியாற்ற தடை: பாா் கவுன்சில் உத்தரவு

7th Dec 2022 01:27 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் ஒன்பது வழக்குரைஞா்கள் பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனது கட்சிக்காரரிடம் பெருந்தொகையைக் கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்ட நந்தகோபாலன், குழந்தை கடத்தல் வழக்கில் தொடா்புடைய திருச்சியை சோ்ந்த பிரபு ஆகியோா் வழக்குரைஞா் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்பது லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி பணி நியமன உத்தரவு வழங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய கடலூரைச் சோ்ந்த பெருமாள், உயா் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய சென்னையைச் சோ்ந்த ரமேஷ், பொன் பாண்டியன், திருவாரூா் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய முத்தாட்சி ஆகியோருக்கும் வழக்குரைஞா் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய சென்னை சோ்ந்த ரோஜா ராம்குமாா் மற்றும் மதுரையைச் சோ்ந்த அருண்பாண்டியன் ஆகியோருக்கும் வழக்குரைஞராக பணியாற்ற தடை விதித்து பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT