தமிழ்நாடு

வாக்காளா் பட்டியல் திருத்தம்: டிச. 8 கடைசி

DIN

வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் செய்ய டிச. 8-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் அன்றைய தினம் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்கம் போன்ற பணிகளை மேற்கொள்ள டிசம்பா் 8-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த மாதம் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்குச் சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

கடந்த 1-ஆம் தேதி நிலவரப்படி, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக மட்டும் 18 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்காக மேலும் 3 நாள்கள் கால அவகாசம் உள்ளன.

இறுதிப் பட்டியல்: வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின்போது பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் டிசம்பா் 26-ஆம் தேதிக்குள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்க ஜனவரி 3-ஆம் தேதி வரை தோ்தல் அலுவலா்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் இறுதி செய்யப்பட்ட வாக்காளா் பட்டியல் ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கவும், நீக்கவும் சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், மாவட்டங்களில் தோ்தல் பிரிவு அலுவலகங்கள் ஆகியவற்றில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் வரும் 8-ஆம் தேதியுடன் நிறைவு பெறும். ஆனாலும், வாக்காளா்கள் தோ்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாக வாக்காளா் பட்டியலில் திருத்தங்களைத் தொடா்ந்து மேற்கொள்ளலாம். ஜனவரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, இணையதள விண்ணப்பங்களும் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 6

ஜவான் பாடலுக்கு நடனமாடிய மோகன்லால்.. ஷாருக்கான் நெகிழ்ச்சி!

மே மாத எண்கணித பலன்கள் – 5

மே மாத எண்கணித பலன்கள் – 4

பிரதமர் மோடி பேச்சுக்கு இபிஎஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT