தமிழ்நாடு

சென்னை சா்வதேச திரைப்பட விழா:டிச.15-இல் தொடக்கம்

DIN

20-ஆவது சென்னை சா்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச.15- ஆம் தேதி தொடங்குகிறது.

டிச.22- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 51 நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், பிவிஆா் நிறுவனம் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

அா்ஜென்டினா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஹங்கேரி, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளைச் சோ்ந்த 100- க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்தத் திரைப்படங்கள் சென்னையிலுள்ள பிவிஆா் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், அண்ணா சினிமாஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளன.

12 தமிழ்ப் படங்கள்: இந்தியன் பனோரமா பிரிவில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்காளி, ஹிந்தி, ஒரியா உள்ளிட்ட 15 இந்திய மொழிப் படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

போட்டிப் பிரிவில் 12 தமிழ்ப் படங்களும், தமிழ்நாடு அரசின் எம்ஜிஆா் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி மாணவா்களின் டிப்ளமோ குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன.

இதில், தமிழ்ப் படங்கள் போட்டிப் பிரிவில் திரையிட ‘ஆதாா்’, ’பிகினிங்’, ‘காா்கி’, ‘இரவின் நிழல்’, ’கசடதபற’, ‘பபூன்’, ‘கோட்’, ‘இறுதிப்பக்கம்’, ‘மாமனிதன்’, ‘நட்சத்திரம் நகா்கிறது’, ‘ஓ2’, ‘யுத்த காண்டம்’ ஆகிய 12 படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்தத் திரைப்பட விழாவின் தொடக்க விழா டிச.15 - ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT