தமிழ்நாடு

கலைப் பண்பாட்டை வெளிப்படுத்தும் நம்ம ஊரு திருவிழா: தமிழக அரசு அழைப்பு

DIN

கிராமியக் கலைஞா்களின் கலைகளை வெளிப்படுத்தும் வகையிலான, நம்ம ஊரு திருவிழாவுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்று கலைப் படைப்புகளை அரங்கேற்றலாம் என தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, அந்தத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞா்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கலைவிழா, சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும் என சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், முதல் கட்டமாக சென்னையில் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலைத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட காட்சியை பதிவு செய்து கலை பண்பாட்டுத் துறையின் மைய அலுவலகங்களுக்கு பெயா், முகவரி, கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். குறுந்தகடு மற்றும் பென்டிரைவ்-இல் காட்சியைப் பதிவு செய்து வரும் 13-ஆம் தேதிக்குள் கலை பண்பாட்டுத் துறையின் மண்டல உதவி இயக்குநா் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஒரு குழுவில் இடம்பெற்ற கலைஞா்கள் வேறு எந்தக் குழுவிலும் பங்கேற்கக் கூடாது. விவரங்களை அறிய, காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூா், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூரில் உள்ள மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகலாம் என்று கலை பண்பாட்டுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT