தமிழ்நாடு

புயல் எச்சரிக்கை: தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை

6th Dec 2022 03:42 PM

ADVERTISEMENT

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரனுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக உருவாகியிருப்பதாகவும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை புயலாக மாறும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

இதனால், டிசம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 9ஆம் தேதி சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | புயல் எதிரொலி: சென்னையில் 8,9-ல் மிக மிகக் கனமழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பை நேரில் சந்தித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் ஆலோசனை நடத்தினார்.

மழையின் தன்மை, எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT