தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரக்ஞானந்தா சந்திப்பு!

6th Dec 2022 01:37 PM

ADVERTISEMENT

அர்ஜூனா விருது பெற்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

செஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு பெருமை சோ்த்து வரும் இளம் வீரரும், தமிழகத்தைச் சோ்ந்தவருமான பிரக்ஞானந்தா, அா்ஜுனா விருது பெற்றுள்ளார். நடப்பாண்டில் தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 2 வெண்கலம் (ஓபன், தனிநபா்) வென்று அசத்தியிருந்தாா். நடப்பு உலக சாம்பியனான நாா்வே வீரா் மேக்னஸ் காா்ல்செனை ஒரே ஆண்டில் 3 முறை வீழ்த்திய ஒரே வீரராக இருக்கிறாா் பிரக்ஞானந்தா. 

இந்நிலையில் குடியரசுத் தலைவரிடம் அர்ஜூனா விருது பெற்றுள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

ADVERTISEMENT

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தாம் 'தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக இருந்ததாக வீரர்கள் பலரும் கூறினார்கள். பெருமையாக இருக்கிறது. அதனை ஏற்பாடு செய்து நடத்திய தமிழக அரசுக்கு நன்றி. உலகத்தின் நம். 1 செஸ் வீரராக வர வேண்டும் என்பதே என் கனவு' என்று கூறினார். 

இதையும் படிக்க | 'தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியராகத் தகுதியில்லை'

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT