தமிழ்நாடு

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் மகா தீபம்!

6th Dec 2022 06:47 PM

ADVERTISEMENT

 

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 

தீபத் திருவிழாவையொட்டி செவ்வாய்கிழமை மாலை 5.00 மணியளவில் அருள்மிகு செவ்வந்தி விநாயகர், அருள்மிகு தாயுமானசுவாமி மற்றும் அருள்மிகு மட்டுவார் குழலம்மை உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டன. 

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு அருள்மிகு உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 5 அடி உயர செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

 300-மீட்டர் அளவுள்ள திரியில் இலுப்பை எண்ணை,  நல்லெண்ணை, நெய் பருத்தித் துணிகளைக் கொண்டு செய்யப்பட்ட 700-லிட்டர் திரியைக் கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், தக்கார் எஸ். செல்வராஜ், இணை ஆணையர்,  இத்திருக்கோயில் உதவி ஆணையர் / செயல் அலுவலர் இரா. ஹரிஹரசுப்பிரமணியன் ஆகியோர்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT