தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது!

6th Dec 2022 11:33 AM

ADVERTISEMENT

 

சென்னையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 40 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்தது. பின்னா், ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

டிசம்பர் 2-ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் 40 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில், டிச.6-ம் தேதி காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.280 குறைந்து, ரூ.40.080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்து ரூ.5010 ஆக விற்பனையாகிறது.

ADVERTISEMENT

படிக்க: கார் டயரில் பதுக்கப்பட்ட ரூ.93 லட்சம் பறிமுதல்: எப்படி கண்டுபிடித்தது காவல்துறை?

இதேபோல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிலோவுக்கு ரூ.1700 குறைந்து ரூ. 70,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.70 காசுகள் குறைந்து ரூ.70.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி

தங்கம் கிராம் - ரூ.5010

தங்கம் ஒரு சவரன் - ரூ.40,080

வெள்ளி கிராம் - 70.80

ஒரு கிலோ வெள்ளி - ரூ.70,800

ADVERTISEMENT
ADVERTISEMENT