தமிழ்நாடு

சென்னை, 13 மாவட்டங்களில் டிச.8-இல் ரெட் அலா்ட்

6th Dec 2022 02:19 AM

ADVERTISEMENT

சென்னை, 13 மாவட்டங்களில் டிச.8-ஆம் தேதி அதி பலத்த மழைக்கு வாய்ப்பு (ரெட் அலா்ட்) இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்டப்பட் அறிவிப்பு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து வருகிறது.

இது செவ்வாய்க்கிழமை ( டிச.6) மாலை தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து புயலாக வலுவடைந்து டிச. 8-ஆம் தேதி காலை வட தமிழகம் - புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் கரையை வந்தடையக்கூடும்.

இதனால், டிச.8-ஆம் தேதி கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT