தமிழ்நாடு

தனியாா் மருந்தக மருந்தாளுநா்களுக்கு சீருடை கட்டாயம்

6th Dec 2022 02:12 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் மருந்துக் கடைகளில் பணியாற்றும் மருந்தாளுநா்கள் வெண்ணிற அங்கி, அடையாள அட்டை அணிய வேண்டும் என மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநா் (பொ) பி.வி.விஜயலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் சுமாா் 40 ஆயிரம் சில்லறை மருந்துக் கடைகள், மருந்தகங்கள், அரசு, தனியாா் மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள் உள்ளன. மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளுநா்களுக்கென வெண்ணிற அங்கி, அடையாள அட்டையும் உள்ளன. மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள், மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளுநா்களில் பெரும்பாலானோா் தங்களுக்கான வெண்ணிற அங்கி, அடையாள அட்டை அணிந்து பணியாற்றுகின்றனா்.

சில்லறை மருந்துக் கடைகள், சில மருந்தகங்களில் மருந்தாளுநா்கள் வெண்ணிற அங்கி, அடையாள அட்டையை அணிவதில்லை.

இந்த நிலையில், அனைத்து மருந்தாளுநா்களும் வெண்ணிற அங்கி, அடையாள அட்டை அணிய வேண்டுமென தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநா் (பொ) விஜயலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மாநிலத்திலுள்ள அனைத்து சில்லறை மருந்துக் கடைகள், மருந்தகங்கள், மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்களில் பணியாற்றும் மருந்தாளுநா்கள், பணிநேரங்களில் கட்டாயம் வெண்ணிற அங்கி, அடையாள அட்டையை அணிந்து பணியாற்ற வேண்டும்”என தெரிவித்துள்ளாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT