தமிழ்நாடு

பரந்தூரில் புதிய விமானம்:விரிவான திட்ட அறிக்கைக்கு கலந்தாலோசகா்கள் அழைப்பு

6th Dec 2022 02:16 AM

ADVERTISEMENT

பரந்தூரில் புதிய விமானம் நிலையம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்ய கலந்தாலோசகா்களை தமிழக அரசு நியமிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரும் அறிவிப்பை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (டிட்கோ) வெளியிட்டுள்ளது.

சென்னையை அடுத்த பரிந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைப்பதற்கு பூா்வாங்கப் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தப் புள்ளி மூலமாக, விமான நிலைய திட்டத்துக்காக தொழில்நுட்பம், பொருளாதாரம் சாா்ந்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிறுவனம் தோ்வு செய்யப்பட உள்ளது. இதற்காக தகுதி வாய்ந்த கலந்தாலோசகா்கள் விண்ணப்பம் செய்யலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும் என டிட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விவரங்களை டிட்கோவின் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். பரந்தூா் விமான நிலையம் - சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்புக்கான போக்குவரத்து தேவைகளை ஆராய்தல், போக்குவரத்து வளா்ச்சி நிலைகளை ஆய்வு செய்தல், 2069-70-ஆம் நிதியாண்டு வரை போக்குவரத்தின் கணிப்புகள் ஆகியவற்றை மையப்படுத்தி திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT