சென்னையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து நான்காவது நாளாக 40 ஆயிரத்துக்குக் குறையாமல் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலையில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்தது. பின்னா், ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
டிசம்பர் 2-ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் 40 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில், டிச.5-ம் தேதி காலை நிலவரப்படி ஒரு சவரன் ரூ.232 உயர்ந்து, ரூ.40.360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.29 உயர்ந்து ரூ.5045 ஆக விற்பனையாகிறது.
படிக்க: ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு
இதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து ரூ. 72,500-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.90 காசுகள் அதிகரித்து ரூ.72.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
திங்கள்கிழமை நிலவரப்படி
தங்கம் கிராம் - ரூ.5045
தங்கம் ஒரு சவரன் - ரூ.40,360
வெள்ளி - 72.50
ஒரு கிலோ வெள்ளி - ரூ.72,500