இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி, அதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லி புறப்பட்டார்.
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவா்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதையும் படிக்க- 144 நாள்களுக்கு பின்னர் கனியாமூா் தனியாா் பள்ளி திறக்கப்பட்டது!
தில்லியில் டிச.5 -இல் (திங்கள்கிழமை) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் கலந்து கொள்ளவுள்ளனா். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா்.
இதையொட்டி அவர் இன்று காலை தில்லி புறப்பட்டார். தில்லி செல்லும் அவா், கூட்டத்தில் பங்கேற்று விட்டு, அன்று இரவே சென்னை திரும்புகிறாா்.