தமிழ்நாடு

புதுச்சேரி நகரப்பகுதியில் காரும், பைக்கும் மோதி விபத்து: பதற வைக்கும் சிசிடிவி காட்சி!  

5th Dec 2022 01:03 PM

ADVERTISEMENT


புதுச்சேரி நகரப்பகுதியில் காரும், பைக்கும் மோதிக்கொண்டதில் கார் தலைக்குப்புற கவிழுந்து விபத்துக்குள்ளான பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

புதுச்சேரி வெள்ளாழ வீதியை சேர்ந்தவர் டாக்டர் தயாநிதி. இவர் அரியூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். தனது சொகுசு காரில் பெண் மருத்துவருடன் நேரு வீதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது தனியார் ஓட்டல் ஊழியர்களான புவனேஸ், அருண் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் கட்டுபாட்டை இழந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. 

இதையும் படிக்க | காங்கயம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பேலி

இது குறித்து தகவல் அறிந்தவுடன், கிழக்கு பகுதி போக்குவரத்து போலீசார் விரைந்து, படுகாயமடைந்த புவனேஸ், அருண் மற்றும் டாக்டர் தயாநிதி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில் சொகுசு கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT