கோவை, விளாங்குறிச்சி வெங்கடாஜலபதி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கற்பக விநாயகர் மற்றும் ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ காலபைரவர் திருக்கோவில் ஸ்ரீ நவகிரகங்கள் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை விளாங்குறிச்சி வெங்கடாஜலபதி நகரில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக திருமணம் மற்றும் குழந்தை வரம் என கேட்ட வரங்களை வழங்கும் கற்பக விநாயகர்,ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இதையும் படிக்க | சதுரகிரி கோயிலுக்குச் செல்ல தடை: பக்தர்கள் ஏமாற்றம்!
இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் இணைந்து அதே கோவில் வளாகத்தில் புதிதாக காலபைரவர் மற்றும் நவகிரகங்கள் கோயில் கட்டபட்டு, பணிகள் முடிவடைந்த நிலையில், மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அருள்மிகு காலபைரவர் மற்றும் நவ கிரஹங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
விழாவை முன்னிட்டு, திருப்பள்ளி எழுச்சி, மங்கல இசை, விக்னேஷ்வர பூஜையை தொடர்ந்து, சிறப்பு ஹோமங்களுடன் பூர்ணாஹுதி தீபாரதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, கும்பாபிஷேக இளவரசு ஹரி என்கிற சேஷாத்ரி தலைமையில், சிவ ஸ்ரீ கார்த்திகேயன், சிவஸ்ரீ ரஞ்சித் சிவம், சதீஷ் சிவம் மற்றும் அருண் சிவம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் அருள்மிகு காலபைரவர் மற்றும் நவ கிரஹங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை நடைபெற்று மகா அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கௌரவ தலைவர்கள் தங்கராஜ் துரைசாமி மற்றும் கோயில் கமிட்டி தலைவர் ராஜமாணிக்கம் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பூபதி கமிட்டி உறுப்பினர்கள் கோபி கண்ணன் சந்திரசேகர் புவனேஸ்வரி வஜ்ரவேல் பக்தவச்சலம் செல்வராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.